×

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை

நாகப்பட்டினம், ஆக.10: இந்திய நாட்டின் 75வது ஆண்டு சுதந்திரதின விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நேற்று தொடங்கியது. நகர தலைவர் உதயச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தஸ்லீம், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர், மாணவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோபி, கீழையூர் வட்டார துணை தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட தலைவர் அமிர்தராஜா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட் வழியாக பாதயத்திரையாக வேளாங்கண்ணி சாலை வரை சென்றனர். பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் வழி எங்கும் பொது மக்களை சந்தித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை விளக்கி பேசினர். மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : Congress party ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு...