நாகப்பட்டினம், ஆக.10: புகழ்பெற்ற நாகூர் தர்காவில் முகரம் பண்டிகையில் பிரச்னை மீறி பாரம்பரிய முறைப்படி துவா செய்து பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் முகரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் சிறப்பு துவா செய்வது வழக்கம். இந்நிலையில் நாகூர் தர்காவை நிர்வாகம் செய்ய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் சிறப்பு துவா செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முகரம் பண்டிகை தினத்தில் சிறப்பு துவா செய்வதுதில் திடீரென பிரச்னை எழுந்தது. சிறப்பு துவா செய்வது குறித்து நாகை ஆர்டிஓ முருகேசனிடம் புகார் மனு அளித்தார். புகாரை விசாரித்த நாகப்பட்டினம் ஆர்டிஓ முருகேசன் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முகரம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றார்.
இந்நிலையில் மானேஜிங் டிரஸ்டி சார்பில் நாகூர் தர்காவில் அறிவிப்பு நகல் நேற்று ஒட்டப்பட்டது. இதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் நடைபெற இருந்த முகரம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக இருந்தது. இதை தொடர்ந்து டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாகிப் முகரம் பண்டிக்கான ஏற்பாடுகளை செய்தார். நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் முகரம் சிறப்பு துவா செய்யப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அப்போது நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டி கலிபா மஸ்தான்சாகிப் கூறியதாவது, ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக முகரம் பண்டிகை தினத்தில் சிறப்பு துவா செய்யப்படும். இதை புதிய நிர்வாகம் தடுக்க நினைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி முகரம் பண்டிகை சிறப்பு துவா நடந்தது என்றார்.