குத்தாலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

குத்தாலம், ஆக. 10: குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல், பி.காம் வணிகவியல், பி.ஏ தமிழ்,ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று முதல் நடைபெறுகிறது. அதன்படி காலை 10 மணியளவில் சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் பழங்குடியினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மதியம் 12 மணி அளவில் தரவரிசையில் 400 முதல் 200 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான பி.எஸ்.சி கணிதம், மற்றும் கணினி அறிவியல்,ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும். 11-ம் தேதி காலை 10 மணியளவில் தரவரிசையில் 400 முதல் 200 வரை மதிப்பெண் பெற்ற பி.காம் வணிகவியல், மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.மேலும் 12-ம் தேதி காலை 10 மணியளவில் தரவரிசையில் 100 முதல் 50 வரை மதிப்பெண் பெற்ற பி.ஏ தமிழ்,ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவில் பயில வருகிற மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுகளின் பங்குபெறும் மாணவர்கள் 10,11,12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.மேலும் தேர்ந்தெடுக்க பட்ட மாணவ, மாணவிகள் கலந்தாய்வு நாளன்று உரிய கட்டணம் ரூ.3,350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: