×

நாங்குநேரி வாலிபர் கொலை வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டில் 4 பேர் சரண்

நாகர்கோவில், ஆக. 9: நாங்குநேரியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில், 4 பேர் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மஞ்சன்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (60). பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்து. இவர்களுக்கு சுப்பையா, சாமித்துரை (23) என்ற மகன்களும், ஒரு மகளும் உண்டு. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் சுப்பையா வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இளைய மகன் சாமித்துரை கூலி வேலைக்கு சென்று வருவதோடு, அவ்வப்போது தந்தையின் பெட்டிக்கடையையும் கவனித்து வந்தார். சாமித்துரைக்கு சமீபத்தில் நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் பேசி முடித்துள்ளனர். கடந்த 28ம் தேதி இரவில் சாமித்துரை வீட்டு வாசல் முன் நின்று, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கும்பல், சாமித்துரையை தனியாக அழைத்து சென்று வெட்டிக் கொலை செய்தனர். நாங்குநேரி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் நாங்குநேரி சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த ெகாலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (31), வடக்கு தாழையூத்து பகுதிய சேர்ந்த பிரவீன்ராஜ், கோவில்பட்டியை சேர்ந்த ராஜ் பாபு (30), ஏர்வாடியை சேர்ந்த ஆனந்த் (22) ஆகிய 4 பேர், நேற்று நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1 ல் சரண் அடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த தகவல் நாங்குநேரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Nagercoil ,court ,Nanguneri ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...