மாநில ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி பள்ளி மாணவர் சாதனை

தென்காசி, ஆக.9: மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவர் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலையில் 4வது மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பங்ேகற்ற தென்காசி எம்கேவிகே பள்ளி 7ம் வகுப்பு மாணவர் சிவமணிகண்டன், 2வது இடத்தை வென்றார். சாதனை படைத்த மாணவரை பள்ளித் தாளாளர் பாலமுருகன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: