கடையநல்லூர் நகராட்சி: தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

கடையநல்லூர், ஆக. 9: கடையநல்லூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வழங்கினார். கடையநல்லூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடுவீடாக  குப்பைகளைச் சேரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு காலணி, மழைக்கோட்டு, கையுறை, தலைக்கவசம், முகக்கவசம், ஒளி பிரதிபலிக்கும் சட்டை உள்ளிட்ட 6 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க முடிவுசெய்யப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு காலணிகளை நகராட்சி சேர்மன் மூப்பன்  ஹபீபுர்  ரஹ்மான் வழங்கினார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, கவுன்சிலர்கள் கண்ணன், முருகன், நகர திமுக செயலாளர் அப்பாஸ் பங்கேற்றனர்.

Related Stories: