குளத்தில் மூழ்கி திருச்சி பேராசிரியர் மகன் சாவு

கீழ்வேளூர், ஆக. 9: திருச்சி மாவட்டம் காட்டூர், கைலாஷ் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அந்தோணி பிரபாகரன் (21). இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்துள்ளார் . தனது நண்பர்களுடன், நாகப்பட்டினம் அருகே புலியூர் கிராமத்தில் உள்ள, தனது நண்பருடைய உறவினரின் விழாவுக்கு வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள பெருங்கடம்பனூர் வைரவன் இருப்பு பகுதியில் உள்ள குளத்திற்கு நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

குளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக அந்தோணி பிரபாகரன் நீரில் மூழ்கி உள்ளார். அவரது சத்தம் கேட்டு, அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி, அந்தோணி பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்தோணி பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து புகாரின் பேரில், கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி பிரபாகரன் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 5 ஆண்டுகளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பலியை தடுக்க முடிவதில்லை. 2018ல் 5 பேரும் 2019-ம் ஆண்டில் 13 பேரும், 2020-ம் ஆண்டில் 8 பேரும், 2021-ம் 9 பேரும் 2022 ஆண்டில் 9 பேரும், இதுவரை 5 ஆண்டுகளில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் பேராலய விழா காலங்களில் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Stories: