தமிழ்நாடு மருத்துவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.9: பணி நேரத்தை உயர்த்தியதை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சிவபாலன், அரவிந்த்குமார், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மருத்துவர்கள் பணி நேரமான காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை எந்தவித கலந்தாய்வும் இன்றி தன்னிச்சையாக அரசாணை வெளியிட்டு மருத்துவர்களின் பணி நேரத்தை அரசு உயர்த்தி இருப்பதை கண்டிப்பது. இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: