ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

கரூர், ஆக. 9: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், இபிஎஸ் 95 அகில இந்திய ஒய்வூதியர் நலச்சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் ஒன்றியஅரசின் இபிஎஸ் ஒய்வூதிய திட்டத்தின் மூலம் ரூ. 500 முதல் 2ஆயிரம் வரை பெற்று வறுமையிலும், பிணியிலும் சிரமப்பட்டு வருகிறோம். நாங்கள் பொதுத்துறை, கூட்டுறவு துறைகள் மற்றும் தனியார் துறைகளில் கடந்த 40 ஆண்டுகள் வரை பணி செய்து ஒய்வு பெற்றவர்கள். நாங்கள் பல்வேறு வழிகளில் அணுகியும் நீதி வழங்கப்படவில்லை.

எனவே, எங்களின் நிலை அறிந்து பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)கரூர், ஆக. 9: கரூர் கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 10ம்தேதி (நாளை) காலை 9மணி முதல் மாலை 3மணி வரை ஒரு நாள் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணியாளம்பட்டி: ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, காணியாளம்பட்டி, வீரியப்பட்டிa, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூர், விராலிபட்டி.

Related Stories: