திருத்தணியில் புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருத்தணி: திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் வகையில் அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 12.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டம் 2021 22ம் ஆண்டிகான  தமிழக அரசு நிதி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள்  திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர்மன்ற துணைத் தலைவர் ஆ.சாமிராஜ் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அரக்கோணம் எம்.பி., எஸ் ஜெகத்ரட்சகன் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மேற்கு  மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம் பூபதி, திருத்தணி நகர திமுக செயலாளர் வினோத்குமார், திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் கோபு, பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜன், நகராட்சி பொறியியல் பிரிவு எழுத்தர் ஜெகநாதன், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: