திருச்சி மாவட்டத்தில்

திருச்சி, ஆக.8: தமிழகமெங்கும் கொரோனா நோயை தடுக்கும் வகையில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு 37,47,704, கோவாக்சின் 6,11,054, கோர்பிவேக்ஸ் (12-14 வயது) 1,34,992 என மொத்தம் 44,93,750 தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோர் 98 சதவீதமும், 2ம் தவணை 87 சதவீதத்தினரும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் திருச்சி புறநகர் மாவட்டத்தில் 1,220 இடங்கள், மாநகர பகுதியில் 600 இடங்கள் என மொத்தம் 1,820 இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று காலை முதல் நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றம், கம்பரசம்பேட்டை துணை சுகாதார நிலையம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் நர்சரி பள்ளி ஆகிய இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: