×

மன்னார்குடி டிஎஸ்பி வேண்டுகோள் முத்துப்பேட்டை அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் தந்தை கைது

முத்துப்பேட்டை, ஆக.8: முத்துப்பேட்டை அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் கோபால் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (35). இவர்களுக்கு மகள் சுபத்திராதேவி (6). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கோபால் தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த மாதம் 29ம் தேதி குழந்தை சுபத்திரா தேவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து கோபால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்தது தெரிந்ததால் கோபால் நேற்று குணமடைந்ததையடுத்து அவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Muthupupatta ,Mannargudi ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...