தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் 20ம் தேதி இலவச சமஷ்டி உபநயன விழா

திருவிடைமருதூர், ஆக. 8: தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் 20ம் தேதி நடைபெற உள்ள இலவச சமஷ்டி உபநயனத்தில் ஏழை, எளிய குடும்பத்தினர் பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிராமண சமாஜம் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் இலவச சமஷ்டி உபநயன விழா நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் 20, 21ம் தேதிகளில், கும்பகோணத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் சமஷ்டி உபநய விழா நடைபெறுகிறது. இதில் ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் நடுத்தர பிராமண குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு முதன்முறையாக முழுவதும் இலவசமாக உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. இதையொட்டி 20ம் தேதி சங்கல்ப, பூர்வாங்க நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மறுநாள் 21ம் தேதி காலை குமாரபோஜனம், பிரம்ம உபதேசம், உபநயன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு பிராமண சமாஜம் நன்கொடையாக அளித்து உதவுகிறது. எனவே இலவசமாக சமஷ்டி உபநயனம் செய்து கொள்ள விரும்பும் ஏழை, எளிய, நடுத்தர பிராமண சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு மாநில மூத்த ஆலோசகர் ஆடிட்டர் சூரிய நாராயணன் கேட்டுக் கொண்டுள்ளார். முன்பதிவு செய்ய விரும்புவோர் மாவட்ட தலைவர் வைத்தியநாதன் 94431 42985, பொதுச் செயலாளர் தர் 90800 34671 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

Related Stories: