×

நோயாளிகளின் நலன் கருதி தஞ்சாவூர் மருத்துவமனை வளாகம் அருகே பஸ்களை அனுமதிக்க வேண்டும்

தஞ்சாவூர், ஆக.8: நோயாளிகளின் நலன் கருதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகே அனைத்து பஸ்களையும் அனுமதிக்க வேண்டும்என்று போக்குவரத்து கழக ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு போக்குவரத்து ஏஐடியூசி நிர்வாகிகள் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி தலைமை வகித்தார் . தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவுகள் குறித்து பேசினார். போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் அறிவித்து வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்களின் உயர்ந்து விட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வை வழங்குவது, 2 ஆண்டாக நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்கள் உடனே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளில் இனியும் தாமதம் இல்லாது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி இறக்கி,ஏற்றப்படுவதால் அவசர நோயாளிகள், முடியாத நோயாளிகள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல்வேறு தொந்தரவுகளும், விபத்துகளும் நடைபெற வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் நனைந்து வரவேண்டிய நிலைகளை கவனத்தில் கொண்டு பயணிகளை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளேயே நிறுத்தி ஏற்றி,இறக்கி பேருந்துகள் இயக்கப்பட மருத்துவ கல்லூரி நிர்வாகமும்,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். தஞ்சாவூர் பிரதான சாலைகள் தற்போது அகலப்படுத்தப் பட்டுள்ளது, பஸ் நிறுத்தங்களில் ஏற்கனவே இருந்த நிழற்குடைகள் அகறறப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மழையில் நனைந்து பஸ்சில் ஏற வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலத்தை கவனத்தில் கொண்டு நிழற்குடைகள் உடனடியாக கட்டி தரப்பட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ன. பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன், தலைவர் டி.தங்கராசு கௌரவத் தலைவர் கே.சுந்தர பாண்டியன் ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, துணைத் தலைவர்கள் எம். மாணிக்கம், டி.சந்திரன் சி.ராஜமன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur Hospital Campus ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு