அரியலூரில் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர், ஆக.8: அரியலூரில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். அரியலூரில் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செட்டியேரிகரை சக்திவிநாயகர் கோயில் அருகே நகர திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு ஏராளமான திமுகவினர் மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக நகர திமுக செயலாளர் முருகேசன் தலைமையில் ஏராளமான திமுகவினர் தேரடியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மார்க்கெட்தெரு வழியாக, செட்டியேரி கரை சென்றடைந்தனர். தொடர்ந்து மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட, ஒன்றிய, நகர திமுகவினர் மற்றும் மதிமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  பின்பு பேருந்து நிலையத்தில் கலைஞர் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அரியலூர் நகரில் பல்வேறு இடங்களில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், அன்பழகன், கென்னடி, அசோகச் சக்கரவர்த்தி, மாவட்ட மதிமுக துணை செயலாளர் ராஜேந்திரன், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்ட கலைஞரின் படத்திற்கு கிளைச் செயலாளர் சுந்தர் தலைமையில் திமுவினர் மலர்தூவி மலரஞ்சலி செலுத்தினர்.

Related Stories: