×

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, குட்கா பயன்பாடு தடுத்து நிறுத்த வேண்டும் பொதுநலஆர்வலர்கள் வலியுறுத்தல்

கரூர், ஆக. 8: கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் குட்கா வகை பயன்பாடு குறித்து கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கன்னியாகுமரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம் துவங்கி கரூர், அரவக்குறிச்சி வரை மாவட்டத்தின் பகுதியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. குட்கா வகை பொருட்கள் அதிகளவு பெங்களூர் போன்ற மாநிலங்களில் இருந்து இந்த பகுதிகளுக்கு மறைமுகமாக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. மாவட்ட போலீசார்களும் தீவிர சோதனை நடத்தி அவ்வப்போது குட்கா வகை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறைக்கு சவால் விடும் வகையில் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மாவட்ட காவல்துறையும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, கஞ்சா விற்பனை செய்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதற்காக ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தின் மூலம் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், கரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா வகை பொருட்கள் விற்பனை செய்யப்படாத நிலையை உருவாக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்