ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

ராஜபாளையம், ஆக. 8: விருதுநகர் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில், ராஜபாளையம் தனியார் பள்ளியில் மாவட்ட செஸ் போட்டி மற்றும் மாநில தகுதி போட்டி நடைபெற்றது. இதில், 230 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 8 வயது, 10 வயது, 13 வயது, 19 வயதுக்குட்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில், 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி மாநில தகுதி போட்டியாக நடந்தது. இதில், இரு மாணவர்கள், இரு மாணவிகள் என 4 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மற்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செஸ் அசோசியேசன் தலைவர் பால்ராஜ் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

Related Stories: