ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

ஆண்டிபட்டி ஆக. 8: ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அமைதி பேரணி நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினர், சக்கம்பட்டி பகுதியில் இருந்து ஆண்டிபட்டி பஸ்நிலையம் வரை அமைதி பேரணி சென்றனர். சக்கம்பட்டி பகுதியில் தொடங்கிய பேரணி தேனி-மதுரை சாலையில், வைகை அணை சாலை பிரிவு வழியாகச் சென்று பஸ் நிலையத்தை சென்றடைந்தனர். பின்னர் ஆண்டிபட்டி பஸ்நிலையம் அருகே வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு எம்எல்ஏ மகாராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம், நகரச் செயலாளர் சரவணன், பேரூராட்சி தலைவர் பொன்.சந்திரகலா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், ஆண்டிபட்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கிளை நிர்வாகிகள் சார்பில், அந்தந்த கிராமங்களில் கலைஞரின் படம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: