மேரிமாதா கல்லூரியில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு

தேவதானப்பட்டி, ஆக 8: தேவதானப்பட்டி அருகே, நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரிமாதா கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நவீன உடற்பயிற்சி கூடம் நேற்று திறக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஐசக் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

 துணை முதல்வர் ஜோஷி, நிதி நிர்வாக அலுவலர் பிஜோய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் சண்முகப்பெருமாள், சாம்ராஜ், கல்லூரி பிஆர்ஓ துரைராமசிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: