முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்

சிவகங்கை, ஆக.8:  முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ஆக.17 அன்று நடக்க உள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூடத்தில் ஆக.17 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர் சார்ந்தோர் தங்களது குறைகளை இரட்டைப்பிரதிகளில் மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: