திருப்புத்தூரில் பெண்கள் கஞ்சிக்கலயம் ஊர்வலம்

திருப்புத்தூர், ஆக.8:  திருப்புத்தூரில் ஆதி பராசக்தி கோயிலில் நேற்று ஏராளமான பெண்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

திருப்புத்தூர்-சிங்கம்புணரி ரோட்டில் ஸ்ரீ ஆதிபராசக்தி கோயில் உள்ளது. நேற்று காலையில் இக்கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து தலையில் கஞ்சி கலயத்தை சுமந்து மேலத்தாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். ஆதிபராசக்தி ரதத்துடன் சென்ற ஊர்வலம் சன்னதி தெரு, நான்கு ரோடு, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, அஞ்சலக வீதி, பெரிய கடை வீதி புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை அடைந்தது. பின்னர் கலயங்களை இறக்கி வைத்த பக்தர்கள் அனைவரும் அம்மனை வழிபட்டனர்.

Related Stories: