×

பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்

பரமக்குடி ஆக.8: பரமக்குடி சரக கைத்தறி துறை சார்பாக நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது. பரமக்குடி சரக கைத்தறித் துறை சார்பாக 8வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, எமனேஸ்வரம் சௌராஷ்டிரா பேரவை அரங்கில் சிறப்பு பொது மருத்துவ முகாம், கொரோனா தடுப்பு ஊசி முகாமினை தொடர்ந்து, நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமை வகித்தார். பரமக்குடி சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் முகாமினை துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பொது மருத்துவ பரிசோதனையும், நெசவாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசியும் செலுத்தி கொண்டனர். இவ்விழாவில் 28 நெசவாளர்களுக்கு முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அலுவலர்கள், மருத்துவ குழுவினர் மற்றும் நெசவாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், கைத்தறி நெசவாளர் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு