திமுகவினர் அமைதி பேரணி

ராமநாதபுரம், ஆக.8: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரத்தில் அமைதி பேரணி நடந்தது. இதையொட்டி, ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா சிலை முன் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து நடந்த அமைதி பேரணியில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் செயலாளர்கள் கார்மேகம் (நகராட்சி தலைவர்), பிரவீன் தங்கம் (துணை தலைவர்), முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: