சாயல்குடி அருகே அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

சாயல்குடி, ஆக.8: சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் பண்ணையூர்அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடந்தது. சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் பண்ணையூர்அம்மன் கோயில் ஆடி மாத வருடாந்திர பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. இரவில் பெண்கள் கும்மியடித்தல், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சுமங்கலிபூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர். திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழச்சிகள் நடந்தது. கடைசி நாளான நேற்றுமுன்தினம் மாலையில் முளைப்பாரியை எடுத்து பெண்கள் கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: