பழநியாண்டவர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவக்கம்

பழநி, ஆக. 8: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியும், சின்னக்கலையம்புத்தூரில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கலந்தாய்வு இன்று (ஆக. 8) துவங்குகிறது.

சுயநிதி பாடப்பிரிவிற்கு வரும் 13ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள், அரசின் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை பின்பற்றி கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்விற்கான அழைப்புக்கடிதம் தபால் மூலமும், கலந்தாய்வு நாள், நேரம் பற்றி விபரங்கள் இமெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நாளன்று அசல் சான்றிதழ்களுடன் உரிய நேரத்திற்கு வர வேண்டுமென கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சின்னக்கலையம்புத்தூரில் உள்ள பழநியாண்டவர் மகளிர் கல்லூரியிலும் இன்று முதல் கலந்தாய்வு துவங்குகிறது.

சுயநிதிப்பிரிவிற்கு  12ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்க உள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: