மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர், ஆக. 8: திருப்பூர்  மத்திய மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்  நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. குமரன் சிலை அருகே உள்ள பெரியார்  சிலை மற்றும் அண்ணாசிலை அருகே கலைஞரின் உருப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி மற்றும் பெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி  நடந்தது.  நிகழ்ச்சிக்கு தெற்கு தொகுதி செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர பொறுப்பாளர்  டி.கே.டி.மு.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்டல  தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமா மகேஷ்வரி, இளைஞரணி  அமைப்பாளர் தங்கராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், பகுதி  செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி அய்யப்பன், மேங்கோ பழனிச்சாமி,  பொறுப்புக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள்  பி.ஆர்.செந்தில்குமார், திவாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: