33வது கொரோனா தடுப்பூசி முகாம் 43 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

கோவை, ஆக. 8: 33வது கொரோனா தடுப்பூசி முகாம் கோவை மாவட்டத்தில் 1530 இடங்களில் நடந்தது. இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 340 முகாம்களும், நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்தப்பட்டன. கோவை மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி வரை முதல்தவணை 32 லட்சத்து 31 ஆயிரத்து 698 பேருக்கும், இரண்டாம் தவணை 27 லட்சத்து 44 ஆயிரத்து 762 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 1 லட்சத்து 84 ஆயிரத்து 524 பேருக்கும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முகாமில் 43 ஆயிரத்து 835பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories: