எட்டயபுரத்தில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம்

எட்டயபுரம்,ஆக.8: எட்டயபுரத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். எட்டயபுரம் தாலுகா தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எட்டயபுரம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிதாக சங்கத்தில் ஆறு உறுப்பினர்கள் இணைந்தனர். எட்டயபுரம் தாலுகா சங்க செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

Related Stories: