கேரளாவுக்கு கடத்த முயன்ற 38 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, ஆக.8: கேரளாவுக்கு கடத்த முயன்ற 38 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யயப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கலா, எஸ்ஐ சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விளாத்திகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது விளாத்திகுளத்திலிருந்து பெருநாழி செல்லும் ரோட்டில், கே.சுந்தரேஸ்வரபுரம் நடுத்தெருவுக்கு செல்லும் சந்திப்பில் வந்த ஒரு மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் தலா 50 கிலோ எடை கொண்ட 38 மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

மினி லாரியை ஓட்டி வந்த கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை, கீழத் தெருவைச் சேர்ந்த பத்திரகாளிபாண்டி (36), அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (35) ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், இந்த அரிசி விளாத்திகுளத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்ததை உறுதி செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மினி லாரி மற்றும் 38 மூடைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: