4ம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் கலைஞர் படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

தூத்துக்குடி,ஆக.8: தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினத்தை யொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர்கள் ஆறுமுகபெருமாள், செந்தூர்மணி, இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பூங்குமார் ரகுராமன், விவசாய அணி செயலாளர் ஆஸ்கர், தொண்டரணி செயலாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிட நல அணி செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, மாடசாமி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணியன், ராமசாமி, இளையராஜா, ஒன்றிய குழு தலைவர் ஓட்டப்பிடாரம் ரமேஷ், மாவட்ட அணி துணைச்செயலாளர் ரெங்கசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பாலன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், மற்றும் நிர்வாகிகள் பாரதிராஜா, கந்தன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: