×

கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; நாகர்கோவிலில் திமுக அமைதி பேரணி; உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

நாகர்கோவில், ஆக.8: கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் திமுக சார்பில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. கலைஞர் உருவப்படத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் மலர் தூவிமரியாதை செலுத்தினர். திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அமைதி பேரணி குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகர்கோவில், வடசேரி, அண்ணா சிலை அருகிலிருந்து பேரணி தொடங்கியது. முன்னதாக அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரணிக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அவை தலைவர் ஜோசப்ராஜ், மாவட்ட துணை செயலாளர் அர்ஜூனன், பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன்,ஒன்றிய செயலாளர்கள் சற்குருகண்ணன், லிவிங்ஸ்டன், நெடுஞ்செழியன், பிராங்கிளின், ரமேஷ்பாபு, எப்.எம்.ராஜரத்தினம், தாமரைபாரதி, மதியழகன் மற்றும் நிர்வாகிகள் சுரேந்திரகுமார், செல்வன், பிஎஸ்பி சந்திரா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, மாநில கலை இலக்கிய அணி செயலாளர் தில்லை செல்வம், மகளிர் அணி செயலாளர் ஜெசிந்தா, டேவிட்சன், அழகம்மாள் தாஸ், குளச்சல் நகர தலைவர் நாகூர்கான், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், எம்.ஜே.ராஜன், பன்னீர்செல்வம் உட்பட திமுக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர். கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் ெபாதுமக்கள் கலந்துகொண்டனர்.

அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை ஜங்ஷன், வேப்பமூடு ஜங்ஷசன் வழியாக சென்ற பேரணி பொன்னப்பநாடார் திடலில் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் உட்பட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் தலைவர் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Tags : DMK Peace Rally ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை