விருதுநகர் நோபிள் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கு வரவேற்பு

விருதுநகர், ஆக. 6: விருதுநகர் நோபிள் மகளிர் கல்லூரியில், முதலாமாண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நோபிள் கல்விக்குழுமத் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். கல்விக்குழும செயலாளர் வெர்ஜின் இனிகோ வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், ‘மாணவியர் தங்களுக்கான குறிக்கோளை முதலாம் ஆண்டு துவக்கத்திலேயே வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கான குறிக்கோளை அடைய எத்தகைய இடையூறுகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்’ என தெரிவித்தார். கல்லூரி துணை முதல்வர் செல்வம் நன்றி தெரிவித்தார். முதலாமாண்டு மாணவியரை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர் பரிசுகள் வழங்கி வரவேற்றனர்

Related Stories: