×

ராஜபாளையம், சாத்தூரில் பெண்கள் வரலட்சுமி விரதம்

சாத்தூர்/ராஜபாளையம், ஆக. 6: சாத்தூரில் பெண்கள் வீடுதோறும் வரலட்சுமி விரதம் தொடங்கினர்.பெண்கள் சுமங்கலியாக வாழ, இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கின்றனர். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கின்றனர். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால், இதை வரலட்சுமி பண்டிகை எனவும் கூறலாம். பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை இந்நாள் ஆடி அல்லது ஆவணி மாதம் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. குறிப்பாக ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில்தான் இந்த பூஜை அனுசரிக்கப்படுகிறது.

Tags : Varalakshmi ,Rajapalayam, Chatur ,
× RELATED என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன்...