குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

வத்திராயிருப்பு, ஆக. 6: வத்திராயிருப்பு அருகே, புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில், சமூக பதுகாப்புதுறை சார்பில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி சாந்தாராம் தலைமை வகித்தார். திமுக கவுன்சிலரும், பேரூர் திமுக செயலாளருமான சாந்தாராம் முன்னலை வகித்தார். இந்த கூட்டத்தில், ‘குழந்தை திருமண தடைச்சட்டம்-2006, குழந்தை தொழிலாளர் தடை சட்டம்-1986 ஆகியவை குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பேரூராட்சியில் 18 வயதிற்குட்ட குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி படுத்துவது நமது கடமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், ‘குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஜானகி, எஸ்ஐ பாலசுந்தரம், ஒருங்கினைப்பாளர் விஸ்வநாதன், தலைமையாசிரியர் செல்வராணி, கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முகமது ரபீக் செய்திருந்தார்.

Related Stories: