கீழக்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

கீழக்கரை, ஆக.6:  கீழக்கரை பேக்கரியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்கப்பட்டதாக பொதுமக்கள் புகாரின் பேரில் உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கீழக்கரையில் ஏராளமான உணவகங்கள் உள்ளன. இங்குள்ள தனியார் பேக்கரி ஒன்றின் மீது பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நுகர்வோர் ஒருவர் கீழக்கரை நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தான் வாங்கிய உணவு பொருள் கெட்டுப்போய் இருந்ததாக புகார் மனு அனுப்பியிருந்தார். இதனையடுத்து கீழக்கரை சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா குறிப்பிட்ட கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி ஜெயராஜ் ஆய்வு மேற்கொண்டதோடு அங்குள்ள உணவு பொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்றார். மேலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Related Stories: