திருச்செந்தூர், தூத்துக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து காங். போராட்டம்

திருச்செந்தூர்,  ஆக. 6: ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மக்கள் விரோத  போக்கைக் கண்டித்து திருச்செந்தூர், தூத்துக்குடியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஒன்றிய அரசின் மக்கள்  விரோத போக்கைக் கண்டித்து திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட  காங். சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளுக்காக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செந்தூர் வட்டார காங். தலைவர்  சற்குரு தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன்,  விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் வேல் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட  தலைவர் சிவசுப்பிரமணியன், ஓபிசி அணி மாவட்ட தலைவர் ராஜ்குமார், மனித  உரிமைத்துறை மாவட்ட தலைவர் ராஜகுமரன், நகர காங். தலைவர் முருகேந்திரன்,  நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். தலைவர் ஊர்வசி  அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை  விளக்கி பேசினார்.

இதில் வட்டார தலைவர்கள் துரைராஜ், ஜோசப், நல்லகண்ணு,  பாலசிங், பிரபு, பார்த்தசாரதி, விவசாயப் பிரிவு மாவட்ட பொருளாளர் கார்க்கி,  கலைப்பிரிவு மாவட்ட தலைவர் செண்பகராமன், நகர துணை தலைவர் விஸ்வநாதன்,  ஐயப்பன் ஐயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காங். முன்னாள் தலைவர் முத்துக்குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் வெள்ளப்பட்டி ஜேசுதாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, மாவட்ட காங். பொதுச்செயலாளர் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தனர்.

இதில் மணல்மேடு மீனவரணி மிக்கேல் குரூஸ், ஜெயமணி, பேரையா, ஜான் வெஸ்லி, பெத்துராஜ், எட்வர்ட்ராஜ், மடத்தூர் தனபால்ராஜ், முள்ளக்காடு மாரியப்பன், சுந்தர் ராஜ், சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, பிரபு, கவுதம், கார்த்தி, பாலன், ஜெயசிங், கோபி, செல்வராஜ், மகிளா காங். செல்லதாய், சாவித்திரி, சற்குணம், ஆறுமுக கனி, ஜோதி, கிருஷ்ணம்மாள், சுந்தரி, மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: