வரலாற்றை தெரிந்து கொள்ளவே திராவிட மாடல் பயிற்சி பாசறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

கோவில்பட்டி, ஆக. 6: வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளவே திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்படுவதாக கோவில்பட்டியில் நடந்த பாசறை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி  வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கோவில்பட்டியில் இளைஞரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசுகையில், தோளில் துண்டு போட முடியாத நிலை, ஆலயத்திற்குள் அனுமதி கிடையாது, கல்வி கற்க முடியாத நிலை, வேலைவாய்ப்பு இல்லாத நிலை என சமூகத்தில் இருந்த பல்வேறு சீர்கேடுகளை ஒழித்து இன்றைக்கு தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. தொழில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறது.

இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது. முன்பு இருக்கையில் அமரக்கூட அனுமதி கிடையாது. இன்றைக்கு அனைவரும் சமமாக அமரும் நிலை உள்ளது. எல்லோரும் படிக்கிறோம், எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை நீதிக்கட்சியில் இருந்து உருவாக்கியது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கலைஞர். இவர்கள் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் கொள்கை. வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்று வருகிறது, என்றார்.

நகராட்சி சேர்மன் கருணாநிதி, மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி  அமைப்பாளர் மகேந்திரன் வரவற்றார். மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர்  தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி லெனின் ஆகியோர் கருத்துரை  வழங்கினர். இதில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு  உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், துணை  அமைப்பாளர் சந்தானம், கடம்பூர் முருகன், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு,  துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், பரமசிவம், தவமணி, பொறியாளர் அணி துணை  அமைப்பாளர் ரமேஷ், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன்,  துணை அமைப்பாளர் சண்முகராஜா, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்  அமலிபிரகாஷ், நகராட்சி கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்துமேரி, நகர பொருளாளர்  ராமமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன்,  நாகராஜ், குருசெல்லப்பா, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் மணி, நகர  அவைத்தலைவர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, புஷ்பராஜ்,  ரவீந்திரன், நகர துணை செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.

Related Stories: