சுதந்திர தினத்திற்கு சூப்பர் ஏற்பாடு மலைக்கோட்டையில் ஜொலிக்கும் மூவர்ண கொடி

திண்டுக்கல், ஆக. 6:நாடு  சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகளின்  கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளின் சார்பாக சுதந்திர தினத்தின்  பெருமைகளை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசு  அலுவலகங்கள் வண்ண வண்ண கலர் எல்இடி பல்புகள் மற்றும் சீரியல் செட்டுகளால்  அலங்கரிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல்லில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்   உள்ள மலைக்கோட்டை சுதந்திர போராட்ட சரித்திரம் கண்டது. இங்கு நாட்டின்  75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நாள்தோறும்  மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரை மலைக்கோட்டையின் மேல் உள்ள கோட்டை  சுவர் மற்றும் பாறையில் மீது தேசிய கொடியின் கலரான ஆரஞ்சு, வெள்ளை, பச்சை  நிறத்தில் லேசர் ஒளி வெள்ளத்தில் ஜொலி, ஜொலித்து வருகிறது அதில் 75வது  சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் ‘75’ என்ற எண் லேசர் வழியில்  உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: