விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி: வேடசந்தூர் கோர்ட் அதிரடி

வேடசந்தூர், ஆக. 6:வேடசந்தூர் தாலுகா, வடமதுரை ஒன்றியம், பாகநத்தம் கிராமம் தோப்பூரை சேர்ந்த தம்பதி காளியப்பன், பழனியம்மாள். கடந்த 2012ம் ஆண்டு இருவரும் தங்களது 10 மாத குழந்தை ஷர்மிளாவுடன் டூவீலரில் கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூர் டெப்போவிற்கு சொந்தமான அரசு பஸ், இவர்களது டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை ஷர்மிளா உயிரிழந்தது. இதுகுறித்த வழக்கு வேடசந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் பழனியம்மாளுக்கு, அரசு போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இப்பணத்தை செலுத்தாத காரணத்தால் பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட் அமினா செல்லச்சாமி மற்றும் ஊழியர்கள் வேடசந்தூர் பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கு பழநி செல்வதற்காக நின்றிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர்.

Related Stories: