ஆடி வெள்ளி அன்னதானம்

நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ளது ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில். இங்கு 31ம் ஆண்டு ஆடித்திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம் என  நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விழா ஏற்பாட்டினை தாபகர் ராமகிருஷ்ணன், நிர்வாகிஸ்தர் சுரேந்திரன் பானுமதி செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஆடிவெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலப்பாண்டியன் ஏற்பாட்டில் 2500க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு சைவ அன்னதான விருந்து அளிக்கப்பட்டது. இதில் நிலக்கோட்டை பேரூராட்சி திமுக கவுன்சிலர் காளிமுத்து,கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகாலப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: