×

பாஜ அரசை கண்டித்து சுத்தமல்லியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பேட்டை, ஆக.6: நெல்லை அருகே சுத்தமல்லியில் மக்கள் விரோத பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் பரணி இசக்கி, பழவூர் ராமச்சந்திரன், பிச்சுமணி, பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் பங்கேற்று பேசும்போது, மத்தியில் ஆளுகின்ற பாஜ அரசு ஏழை எளிய மக்களை ஏமாற்றுகின்ற பாதிக்கின்ற பலவிதமான வேலையை செய்து வருகிறது.

இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. நாட்டில் கிராமப்புற மக்கள் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் கடுமையான விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜ அரசு பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு செயல்படுவதுடன், அமலாக்க துறையை ஏவி பழிவாங்கும் நடவடிக்கைகளை கையாண்டு மக்களை திசை திருப்ப பார்க்கும் இந்த ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத செயலில் ஈடுபடும் பாஜ அரசை வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது என்றார்.

முன்னதாக மக்கள் விரோத பாஜ அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநகர் மாவட்ட தலைவர் காவேரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் பாண்டியன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், கதர் பரமசிவம் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags : Congress ,Sudtamalli ,BJP government ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெற்றியை...