பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கமணி எம்எல்ஏ ஆறுதல்

பள்ளிபாளையம், ஆக.6: வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட தங்கமணி எம்எல்ஏ, நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தங்கமணி எம்எல்ஏ பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், காலை மற்றும் மதிய உணவு வழங்கினார். வெள்ள பாதிப்புகள் நீங்கும் வரை, தேவையான உதவிகள் வழங்குவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி, பேரவை செயலாளர் சுப்பிரமணி, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், சிவக்குமார், ஆறுமுகம், வாசு, பெரியார் நகர் சரவணன், செந்தில், சுரேஷ், சம்பூர்ணம் முனியப்பன், சுஜாதா மாரிமுத்து, கணேசன், ராதாகிருஷ்ணன், ரங்கசாமி, தண்டபாணி, வெங்கடேஷ், சுரேஷ், சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: