×

அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு

சென்னை: ஓமந்தூர் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் ஊர்வலம் நடைபெறுவதால் போக்குவரத்து ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து வெளியிட்ட அறிக்கை: நாளை காலை 8 மணியளவில். திருவல்லிக்கேணி, ஓமந்தூர் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தேவைப்படும் பட்சத்தில் போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும். ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணா சிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வாகன ஒட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...