அஞ்செட்டியில் புதிய தாலுகா அலுவலகம்

தேன்கனிக்கோட்டை, ஆக.6: அஞ்செட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தாலுகா அலுவலகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஓசூர் ஆர்டிஓ தேன்மொழி, தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றினர். அஞ்செட்டி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அஞ்செட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, அதிமுக ஒன்றிய செயலாளர் ஜாகீர் உசேன், சிபிஐ கட்சி ஒன்றிய செயலாளர் முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் பழனி, அஞ்செட்டி ஊராட்சி தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: