அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ஓசூர், ஆக.6: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2022-23ம் ஆண்டிற்கான இளங்கலை (தமிழ் மற்றும் ஆங்கிலம்), இளமறிவியல் (கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல்), புள்ளியியல் மற்றும் பிகாம், பி.காம் (சிஏ), மற்றும் பிபிஏ பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.

 கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் தங்களின் மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், (10,11,12), ஆதார் அட்டை ஆகியவற்றின் உண்மை சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள் 5, புகைப்படம் 5 ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வில் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் சேர்க்கை பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் www.gaschosur.edu.in வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அட்டவணையில் உள்ள தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: