×

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,சோதனை

கிருஷ்ணகிரி, ஆக.6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி திடீர் சோதனை மேற்கொண்டார்.
உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி, நேற்று கர்நாடகாவையொட்டியுள்ள தமிழக எல்லையான  அத்திப்பள்ளி சாலையில் உள்ள டி.வி.எஸ்., சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காய்கறி வண்டிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த புகாரையடுத்து, அந்த வாகனங்களையும் சோதனையிட்டார். மேலும், சேலம் உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவகானந்தன், எஸ்ஐக்கள் தென்னரசு, முரளி ஆகியோர் நேற்று காவேரிப்பட்டணம் பகுதிகளில் அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டதில், சவூளூர் கூட்ரோடு அருகில் உள்ள ராஜா(எ)நிப்பட்ராஜா(50) என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 38 ரேஷன் அரிசி மூட்டை, 10 கோதுமை மூட்டைகள் மற்றும் 59 மூட்டையில் இருந்த அரிசி மாவு உள்ளிட்டவற்றை கைப்பற்றி, மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். அதேபோல் குண்டலப்பட்டியை சேர்ந்த சங்கர்(48) என்பவரது மாவு மில்லில் இருந்த 150 கிலோ ரேஷன் அரிசியை, பறிமுதல் செய்து, அவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Prevention of ,Foodfood trafficking Division S. GP ,
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...