×

கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கு பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்டது யார்?; திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

திருவள்ளூர்: திருவள்ளூரில் இலங்கையைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை நேற்று முன்தினம்  2 மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரோகினி வசந்தி (40).  இலங்கையைச் சேர்ந்த இவர் அபுதாபியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அப்போது  அங்கு இவருடன்ன் பணிபுரிந்த திருவள்ளூர் அடுத்த தண்டலம் வளர்புரம் பகுதியைச் சேர்ந்த  கார்த்திகேயன் என்பவரை காதலித்து கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் வளர்புரம் கிராமத்திற்கு மனைவியுடன் வந்த கார்த்திகேயன், அங்கு போதிய வசதி இல்லாததால் திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குடியேறினார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அபுதாபியிலிருந்து கணவன் மனைவி என இருவருமே தமிழகம் திரும்பியதால் போதிய வருமானம் இல்லை எனக் கூறி வலுக்கட்டாயமாக கணவன் கார்த்திகேயனை 2010-ம் ஆண்டு மீண்டும் அபுதாபிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேத்திகளை பார்ப்பதற்காக கார்த்திகேயனின் தாய் தந்தையர் வந்து பார்த்த போது வீட்டில் வேறு நபர்கள் இருந்துள்ளனர். இது குறித்து கேட்டதற்கு,  மாமனார், மாமியார் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனைடுத்து மகனிடம் விவரத்தை சொல்லவே, கார்த்திகேயனும் விடுமுறையில் வந்து விசாரித்த போது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பது உறுதியானதையடுத்து  கார்த்திகேயன் கடந்த 2012-ல் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

அப்போது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை பராமரிக்க செலவுத் தொகையாக மாதம் தோறும் ரூ. 50 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஒரு வருடம் ஜீவனாம்சம் கொடுத்த வந்த கார்த்திகேயன், மனைவியின் நடத்தையால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக அந்த தொகையை வழங்குவதை நிறுத்திவிட்டார். இதை எதிர்த்து அவரது கணவர் கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரோகிணி வசந்தி திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் அவர் நடத்தும்  தையல் கடைக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை  வெட்டியுள்ளனர்.  இதை தடுக்க வந்த அந்த கடையில் பணிபுரிந்த பாபு என்பவரையும் அவர்கள் மிரட்டி விட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த ரோகிணி வசந்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரோகினி வசந்தி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்குள் புகுந்து பெண்ணை வெட்டி தப்பிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மபபி மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் கார்த்திகேயன் குடும்பத்தார் தான் தன்னை கொலை செய்ய தி்ட்டமிட்டதாக ரோகினி வசந்தி கூறுவதில் எந்த உண்மையும் இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

கணவன் கார்த்திகேயன் குடும்பத்தாரிடம் விசாரித்த போது, நடத்தை சரியில்லாததால் தான் விவாகரத்து கேட்டு இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாத நிலையில் மகன் அபுதாபியில் இருக்கும் சூழ்நிலையில் எங்கள் மீது இது போன்று வீண் புகார்களை தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே கடையில் இருக்கும் போது உள்ளே புகுந்து வெட்டியவர்கள் யார் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு காமராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகியிருந்தால் அதை வைத்து குற்றவாளிகளை கைது செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகே கடைக்குள் புகுந்து வெட்டியது யார் என்பது தெரியும்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...