திருவில்லிபுத்தூர்யூனியன் அலுவலகத்தில் பயிற்சி முகாம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக, வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், ஆணையாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமமாலினி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு கூட்டத்தில் விரிவான விளக்கம் தரப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை யூனியன் அலுவலகம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: