ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் சிறை நிரப்பும் போராட்டம் தேனியில் இன்று நடக்கிறது

தேனி: தேனியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில்  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசினைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் இன்று (5ம்தேதி) நடத்தப்பட உள்ளதாக தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர்  தெரிவித்தார். தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் கூறியதாவது: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜ அரசின் மக்கள் விரோத கொள்கையால் நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு  ஏற்பட்டுள்ளது. மேலும், மோடி தலைமையிலான அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய பாஜ அரசின் போக்கை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்துள்ளதையடுத்து, தேனியில் நேரு சிலை அருகே இன்று (ஆக.5) தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சாலைமறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: