×

கலைஞர் நகர்புற திட்டத்தில் ரூ.1.88 கோடியில் கற்றல் மையம் பூமிபூஜை

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமையுள்ள கற்றல் மையத்திற்காக பூமிபூஜை நேற்று நடந்தது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் பிரமாண்டமான முறையில் கற்றல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த கற்றல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சியாக இருப்பதால் இந்த மையம் நகராட்சியான திருமங்கலம் நகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் நகரில் உசிலம்பட்டி ரோட்டில் மீனாட்சியம்மன் கோயில் 600 சதுர மீட்டரில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அமைகிறது. நடப்பு நிதியாண்டில் 1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் இந்த கற்றல் மையம் அமைக்கப்படுகிறது. திருமங்கலம் நகராட்சி பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமபகுதிகளை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கணினிஅறை, வாகன காப்பகம், உணவு அருந்தும் இடம், பெரிய படிக்கும் அறை உள்ளிட்டவைகளுடன் பிரமாண்டமான முறையில் கற்றல் மையம் அமைகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த யைமத்திற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமையில் நடந்த இந்த பூமிபூஜைக்கு நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் டெரன்ஸ்லியோன், பொறியாளர் ரத்தினவேல், திருமங்கலம் திமுக நகர செயாளர் தர், நகராட்சி குழு உறுப்பினர் தலைவர் ஐஸ்டின் திரவியம், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், காசிபாண்டி, வீரக்குமார், ஜெமிலாபௌசியா, மங்களகெளரி, சாலியாஉஸ்பத், திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் அசாரூதின், கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Crore Learning Center ,Bhoomi Pooja ,
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...